பிரித்தானியாவில் 450 பேர் மரணத்திற்கு காரணமான பெண் மருத்துவர்: வெளியான பகீர் தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் நோயாளிகளுக்கு சக்தி வாய்ந்த வலி நிவாரணி வழங்கி, அவர்கள் மரணத்திற்கு காரணமான மருத்துவர் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் சுயாதீன குழு ஒன்று மேற்கொண்ட விசாரணையில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மரணமடைந்த நோயாளிகளுக்கு மருந்து பரிந்துரை செய்தது ஜேன் பார்டன் என்ற மருத்துவர் என்பதும், இந்த விவகாரம் 1989 முதல் 2000 ஆண்டு வரை நடைபெற்றது எனவும் குறித்த சுயாதீன குழு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் மே, இது மிகவும் மோசமான நிகழ்வு எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவர் பார்டனுடன் தொடர்புடைய ஒரே ஒரு நபர் மட்டுமே தற்போது துறை ரீதியான நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

இவரது மேற்பார்வையின் கீழ் 12 நோயாளிகள் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி மருத்துவர் பார்டன் மீது 92 நோயாளிகள் மரணமடைந்த விவகாரத்தில் விசாரணை துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 25,000 கோப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி Gosport போர் நினைவு மருத்துவமனையில் மட்டும் 450 நோயாளிகள் சக்தி வாய்ந்த வலி நிவாரணி மருந்தால் மரணமடைந்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...