குட்டி இளவரசருக்கு பெயர்சூட்டு விழா: திகதியை அறிவித்தது அரண்மனை

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது குட்டி இளவரசருக்கு வரும் ஜூலை 9-ம் திகதி ஞானஸ்தானம் வழங்கப்படும் என கென்சிங்டன் அரண்மனை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பேரனான இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டன் தம்பதிக்கு கடந்த ஏப்ரல் 23-ம் திகதி ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.

ஏற்கனவே இந்த தம்பதிக்கு ஜார்ஜ் (4) என்ற ஆண் குழந்தையும், சார்லெட் (2) என்ற பெண் குழந்தையும் உள்ள நிலையில், மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் குட்டி இளவரசருக்கு லண்டன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி தலைமையில் ஞானஸ்தானம் வழங்கப்படும் என கென்சிங்டன் அரண்மனை நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

முன்னதாக குட்டி இளவரசரின் சகோதரர் ஜார்ச்-க்கு செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையிலும், சகோதரி சார்லெட்க்கு Queen's Sandringham-ல் உள்ள செயின்ட் மேரி மக்டலேனே தேவாலயத்திலும் ஞானஸ்தானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...