லண்டன் ரயில்நிலைய குண்டு வெடிப்பு சம்பவம்: 23 வயது இளைஞர் கைது

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தென்மேற்கு ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள தென்மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 3 பேர் லேசான காயங்களுடனும், 2 பேர் படுகாயங்களுடனும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில் ரயில் நிலையத்தை உடனடியாக மூடி அப்பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றியதோடு, குற்றவாளியை தேடும் முயற்சியிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் 23 வயதுள்ள இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்