சுற்றுலா சென்ற இடத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்த பெண்: பரிதாப சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சுற்றுலா சென்ற இடத்தில் அலமாரிக்குள் சிக்கி தண்ணீரில் முழுவதுமாக நனைந்து hypothermiaவால் பாதிக்கப்பட்டு ஒரு பெண் இறந்து கிடந்த பரிதாப சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.

Elizabeth Mary (60) என்னும் அந்தப் பெண் விடுமுறையைக் கழிப்பதற்காக விடுதி ஒன்றில் தங்கியிருக்கிறார்.

ஒரு நாள் இரவில் சிறுநீர் கழிப்பதற்காக பாத்ரூம் செல்வதாக நினைத்து தவறுதலாக அலமாரிக்குள் சென்ற Elizabeth உள்ளே புகுந்ததும் அலமாரியின் கதவு உள்புறமாக மூடிவிட்டது.

அலமாரியின் கதவைத் திறக்கும் முயற்சியில் துரதிர்ஷ்டவசமாக கதவின் கைப்பிடி உடைந்து விட, உள்ளேயே சிக்கிக் கொண்டார் Elizabeth.

எப்படியாவது தப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் அலமாரியின் சுவர் வழியாக செல்லும் குழாய் ஒன்றை உடைத்து அதை வைத்து கதவை உடைக்கலாம் என்று எண்ணி குழாயை உடைக்க, குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கத் தொடங்கியிருக்கிறது.

கதவை உடைக்க முடியாததால் சுவரை உடைக்கலாம் என்று எண்ணி சுவரை உடைக்க முயல, பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் செய்யப்பட்ட சுவர் உடைந்திருக்கிறது.

ஆனால் அதற்கு பின்னும் சுவர் போன்ற ஏதோ ஒன்று தடுக்க சோர்ந்து போய் உடைக்கும் முயற்சியைக் கை விட்டிருக்கிறார்.

தூங்குவதற்காகவோ குளிப்பதற்காகவோ உடைகளை களைந்திருந்ததால் நிர்வாணமாக இருந்த அவர் குழாயிலிருந்து பீய்ச்சியடித்த தண்ணீரில் தொப்பமாக நனைந்து விட்டார். இதனால் குளிரில் விறைத்துப்போய் hypothermia தாக்கி உயிரிழந்திருக்கிறார் Elizabeth.

பராமரிப்பு பணிக்காக வந்த ஊழியர்கள் சுவரில் ஓட்டை இருப்பதைக் கண்டு அது எப்படி ஏற்பட்டது என்று பார்க்கும்போதுதான் ஒரு பெண் நிர்வாணமாக இறந்து கிடந்ததைக் கண்டிருக்கிறார்கள்.

இதில் சோக சம்பவம் என்னவென்றால், Elizabeth சுவரை உடைத்து மறுபக்கம் சென்று மேலும் ஒரு சுவர் இருப்பதாக நினைத்து மேலும் தோண்டுவதை நிறுத்திய இடத்தில் இருந்தது சுவரே அல்ல, அது ஒரு படம் மட்டுமே.

அதை சரிவர கவனிக்காமலே Elizabeth இறந்து போயிருக்கிறார். Elizabeth ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...