10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த கொடூர திருடன்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இரண்டு திருடர்கள் இரக்கமில்லாமல் 10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பிரித்தானியாவின் Coventry நகரத்தில் உள்ள வீடு ஒன்றில், திடீரென புகுந்த இரண்டு மர்ம நபர்கள் அங்கிருந்த 10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சம்மந்தப்பட்ட மர்ம நபர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், குற்றவாளிகளின் பெயர்கள் Joshua Juggan (24) மற்றும் Malik Ragnatt (21) என்பது தெரியவந்துள்ளளது.

மேலும், இந்த கொள்ளை சம்பவம் நிகழும்பொழுது வீட்டில் இருந்த, 10 மாத மற்றும் 3 வயது குழந்தை உட்பட இரு பெண்களுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இரக்கமில்லாமல் பிஞ்சுக்குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்த, திருடர்கள் இரண்டு பேருக்கும், கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers