என் மனைவிக்கா முத்தம் கொடுக்கிறாய்? ஜாக்கியை மிரட்டிய இளவரசர் ஹரி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய ராஜ குடும்பமே பார்வையாளர்களாக அமர்ந்த குதிரைப்பந்தயத்தில் வென்ற ஜாக்கி பரிசு பெறும்போது மேகனின் கையில் முத்தமிட, ஹரி அவரை செல்லமாக கோபித்துக் கொள்ளும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

குதிரைப்பந்தயத்தின் முதல் நாளாகிய நேற்று புது மணத் தம்பதியரான இளவரசர் ஹரியும் மேகனும் கலந்து கொண்டனர். குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்கு கோப்பையை பரிசளிக்கும் பொறுப்பும் ஹரி தம்பதியினருக்கு அளிக்கப்பட்டது.

Frankie Dettori என்னும் ஜாக்கி வெற்றி பெற்றதற்காக அவருக்கு மேகன் கோப்பையைப் பரிசளித்ததும் அவர் குனிந்து மேகனின் கையில் முத்தமிட்டார்.

அதைக் கவனித்த இளவரசர் ஹரி என் மனைவியையா முத்தமிடுகிறாய் என்று செல்லமாக கோபித்துக் கொண்டார்.

இதனால் அங்கு சற்று நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. பரிசை பெற்றுக் கொண்ட Frankie Dettoriக்கு ஐந்து பிள்ளைகள், நான் பரிசு பெற்றேன் என்பதைவிட, உங்கள் கையால் பரிசு பெற்றதற்காக என் பிள்ளைகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers