பிரித்தானியாவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: வெளிச்சத்துக்கு வந்த கொடூரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் நபர் ஒருவர் மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரை 16 ஆண்டுகள் வீட்டுக்குள் சிறை வைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் பிர்மிங்ஹாம் பகுதியில் குடியிருக்கும் 47 வயது அஜிஸ் ரெஹ்மான் என்பவரே தனது மனைவியை நீண்ட 16 ஆண்டுகள் வீட்டுச்சிறை வைத்து கொடூரமாக தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தி வந்தவர்.

தினசரி தனது மனைவியை தாக்கி கொடுமைப்படுத்தி வந்த அஜிஸ் ரெஹ்மான், ஒருமுறை கூட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

2000 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் நடந்த இச்சம்பவத்தின்போது ஒருமுறை கூட தனது மனைவியை அஜிஸ் ரெஹ்மான் அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

ரெஹ்மான் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிநாடு சென்ற நிலையில் முதன்முறையாக ஜீனித் பீபி அங்கிருந்து தப்பியுள்ளார்.

பின்னர் அதிகாரிகளிடம் தமது நிலையை விளக்கிய அவர் கணவர் ரெஹ்மான் மீதும் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் ரெஹ்மான் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் அஜிஸ் ரெஹ்மானுக்கு 3 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...