Royal Ascot நிகழ்வின் முதல் நாளிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மேகன் மெர்க்கல்

Report Print Trinity in பிரித்தானியா

அரச குடும்பத்தின் Royal Ascot நிகழ்வின் முதல் நாளிலேயே அனைவரின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து விட்டார் இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல்.

Berkshire ல் நடைபெறும் ஐந்து நாள் பாரம்பர்ய பந்தய திருவிழாவின் முதல் நாளில் மேகன் மெர்க்கல் (36) இளவரசர் ஹரி (33) மற்றும் மஹாராணி (92) அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

முன்னதாக இந்த விழாவிற்கு இளவரசர் எட்வார்ட் மற்றும் Countess of Wessex ஆகிய இருவருடன் இணைந்து மேகன் மெர்க்கலும் இளவரசர் ஹரியும் பயணித்தனர்.

அப்போது ஒரே நிறத்தில் உடையணித்திருந்த மெர்க்கல் தனக்கென வடிவமைக்கப்பட்ட அதே நிற தொப்பி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார்.

வெண்மை நிறத்திலான நவீன கவுனில் அதே நிறத்தோடு சற்று கருப்பில் கோடுகள் போட்டது போன்ற வடிவத்தில் தொப்பி ஒன்றை அணிந்தபடி மேகன் மெர்க்கல் எளிமையாக காணப்பட்டாலும் அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பும்படி உடையணிந்திருந்தார்.

இந்த உடையையும் அவரது திருமணத்திற்கு உடைய வடிவமைப்பு செய்த Givenchy தான் செய்திருக்கிறார்.

மஹாராணி எலிசபெத் அழகிய மஞ்சள் நிறத்திலான ஆடையில் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தார். அவர் இளவரசி ஆன்னி உடன் பயணித்தார்.

இளவரசர் சார்லஸ் மற்றும் Duchess of Cornwall ஆகிய இருவரும் இந்த நிகழ்வில் ஒன்றாக பயணித்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers