பிரித்தானியாவில் சதுப்பு நிலத்தில் சிக்கியவரைக் கண்டுபிடிக்க உதவிய நவீன தொழில்நுட்பம்: வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் சதுப்பு நிலம் ஒன்றில் சிக்கி 24 மணி நேரம் போராடிய ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிசார் நவீன தொழில் நுட்பம் ஒன்றை பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Peter Pugh, தான் வாழும் Brancasterஇலிருந்து கடற்கரையோரமாக நடந்து செல்லும்போது காணாமல் போனார்.

50 பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்று தேடுதல் வேட்டையில் இறங்கியது. பொலிஸ் ட்ரோன் ஒன்றும் Peter Pughஐ தேடும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

சதுப்பு நிலத்தில் அடர்த்தியான நாணலுக்கிடையே ட்ரோன் அவரைக் கண்டுபிடித்தது. அவர் சதுப்பு நிலத்தில் மார்பளவு சேற்றில் சிக்கியிருந்தார்.

சேற்றிலிருந்து அவரை மீட்ட மீட்புக்குழுவினர், கடலோர பாதுகாப்புப் படை ஹெலிகொப்டர் வரும் முன் அவருக்கு முதலுதவி செய்தனர்.

பொலிசார், தீயணைப்பு படையினர் உட்பட பல குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டாலும் கடைசியில் ட்ரோன் என்னும் நவீன தொழில் நுட்பம்தான் Peter Pughஐ கண்டுபிடிக்க உதவியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers