இந்திய வர்த்தக வாய்ப்புகள் அதிகரிப்பு: பிரித்தானிய வர்த்தகத்துறை அமைச்சர்

Report Print Kabilan in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதால், இந்தியாவுடனான வர்த்தக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் Liam Fox தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் லண்டன் நகரில், இந்திய-பிரித்தானிய உறவு குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் Liam Fox கலந்துகொண்டார்.

அப்போது அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியது குறித்து பேசினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறிய பிறகு, இந்தியாவுடனான வர்த்தக வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. ஏனெனில், இரு நாடுகள் இடையே வர்த்தகம் தொடர்பாக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளும், தடைகளும் நீங்கியுள்ளன.

இந்தியா-பிரித்தானியா இணைந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, சர்வதேச வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.

தொழில்நுட்பம், ஏற்றுமதி, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மனிதவள மேம்பாடு என பல்வேறு துறைகளில் இந்தியாவும், பிரித்தானியாவும் இணைந்து சாதிக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers