சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு: பிரித்தானியாவில் இன்று தொடக்கம்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியா-இந்தியா இடையேயான 5 நாள் சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு, லண்டனில் இன்று தொடங்கியது.

பிரித்தானியா மற்றும் இந்தியா இடையேயான உறவு மேம்பட சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு, விருதுகள் வழங்கும் வகையில் 5 நாட்கள் மாநாடு பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது.

Indian Inc நிறுவனம் இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. பிரித்தானியாவின் முக்கிய நகரங்களான பக்கிங்காம்சையர், லண்டன் ஆகியவற்றில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்நிகழ்வில், பிரித்தானியாவுக்கான இந்திய தூதர் Y.K.சின்ஹா, மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, மேற்கு சஃஃபோல்க் அமைச்சர் மாட் ஹான்காக், Indian Inc நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மனோஜ் லட்வா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இம்மாநாட்டில் சர்வதேச தொழிலதிபர்கள், இந்தியா-பிரித்தானியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளதால், இந்தியா மற்றும் பிரித்தானியா இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை இம்மாநாடு உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers