வெளிநாட்டில் பெற்றோரை பெருமையடைய வைத்த தமிழக இளைஞர்! குவிந்த ரசிகர்கள்

Report Print Santhan in பிரித்தானியா

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய பாட்டுத் திறமையால் ரசிகர்கள் பலரை குவித்துள்ளார்.

ஸ்காட்லாண்டில் வசித்து வருபவர் கோலெட் செல்வன். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் அங்கிருக்கும் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பையோமெடிக்கல் இஞ்சினியரிங் படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஸ்காட்லாண்டில் உள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பாடலை அங்கிருந்த அனைவரும் வியந்து ரசித்துள்ளனர்.

மெல்லிய உடல் கொண்ட இந்த இளைஞரிடம் இருந்து எழும் கனீர் குரலுக்கு அனைவரும் ரசிகர்களாகவே மாறிவிட்டனர்.

இவரின் பெற்றோர் பெங்களூருவில் மருத்துவர்களாக பணியாற்றி வரும் நிலையில், மகனின் வீடியோவிற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து பெருமையடைந்துள்ளனர்.

கடல் கடந்து ஸ்காட்லேண்டில் வசிக்கும் இந்த இளைஞரின் பாடல் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...