விமான பணிப்பெண்ணை விபச்சாரி என திட்டிய பிரித்தானிய பயணி: பறக்கும் விமானத்தில் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
306Shares

பிரித்தானியாவில் இருந்து மாசிடோனியா செல்லும் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை விபச்சாரி என திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய தலைநகர் லண்டனில் குடியிருந்து வரும் நபர் ஒருவர் கடந்த ஞாயிறு அன்று காலை Luton விமான நிலையத்தில் இருந்து மாசிடோனியா புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் 4.50 யூரோ மதிப்பிலான வான்கோழி சாண்ட்விச் மற்றும் தண்ணீர் போத்தல் ஒன்றையும் கட்டணம் செலுத்தி பெற்றுள்ளார்.

ஆனால் திடீரென்று அவர் தமக்கு அளிக்கப்பட்ட சாண்ட்விச்சானது வான்கோழி சுவையில் இல்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து விமான பணிப்பெண் ஒருவரை அழைத்து தமக்கு வழங்கப்பட்ட உனவுக்கான கட்டணத்தை திருப்பித் தரும்படி நிர்பந்தித்துள்ளார்.

மட்டுமின்றி தமக்கு வழங்கப்பட்ட உணவானது பன்றி மாமிசத்தால் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், தமது மத நம்பிக்கையின்படி பன்றி மாமிசம் உண்பது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விமான பணிப்பெண் குறித்த அருகாமையில் இருந்த பயணியிடம், அவர் பாலியல் தொழிலாளி போன்று நடந்து கொள்வதாகவும் கூறி ஆபாசமாக திட்டியுள்ளார்.

தொடர்ந்து தமது மத நம்பிக்கைக்கு எதிராக திட்டமிட்டே பன்றி மாமிசத்தால் தயார் செய்த உணவை வழங்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

விமான பயணிகளிடம் இத்தனை மோசமாக எந்த விமான ஊழியர்களும் நடந்துகொண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த விமானத்தின் மூத்த பணிப்பெண் ஒருவர் வந்து குறித்த பயணியிடம் அது பன்றி மாமிசம் அல்ல என விளக்கியுள்ளார்.

இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து ஆபாசமாக திட்டியவாறே பயணம் செய்துள்ளார்.

இதனிடையே அந்த நபரது உணவுக்கான தொகையையும் தண்ணீர் போத்தலுக்கான 2 யூரோ கட்டணத்தையும் ஊழியர்கள் திருப்பி அளித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்