பிரித்தானியாவில் அல்லாஹு அக்பர் என கத்திக்கொண்டே வாள்வெட்டில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
697Shares

பிரித்தானியாவில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே அல்லாஹு அக்பர் என கத்திக்கொண்டே பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் மீது வாள்வெட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த தாக்குதல் விவகாரம் தொடர்பில் மொஹுஸுசன்னத் சௌத்ரி என்ற 27 வயது இளைஞரை கைது செய்த பொலிசார் அவரிடம் இருந்து சாமுராய் வாள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த இந்த விவகாரத்தை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குறித்த நபரை கைது செய்த பொலிசார் அவரது சகோதரியிடம் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அதில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தும் அவரது ராணுவத்தினரும் அல்லாவுக்கு எதிரானவர் என்றும், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களை எந்த இரக்கமும் இன்றி கொன்று குவித்தவர்கள் எனவும்,

அவர்கள் கண்டிப்பாக நரகத்தில் செல்வார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மட்டுமின்றி தமது செயல் ஒன்றும் பயங்கரவாத ஆதரவு முடிவு அல்ல எனவும், பிரித்தானிய ராணுவத்தால் தாம் கொல்லப்பட வேண்டும் என்பதே தமது வேண்டுதல் எனவும் அவர் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே தமது காருடன் சென்ற சௌத்ரி அங்கிருந்த பாதுகாப்பு பொலிசாரின் வாகனம் மீது மோதுவது போல் நாடகமாடியுள்ளார்.

இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட பொலிசார் குறித்த வாகன ஓட்டி மது போதையில் அல்லது போதை மருந்துக்கு அடிமையாக இருக்கலாம் என கருதி, குறித்த வாகனத்தை நெருங்கியுள்ளனர்.

அப்போது சாமுராய் வாளுடன் வெளியே வந்த சௌத்ரி அல்லாஹு அக்பர் என கத்திக்கொண்டே பொலிசாரை நெருங்கியுள்ளார்.

தொடர்ந்து நடந்த போராட்டத்தை அடுத்து சௌத்ரியிடம் இருந்து பொலிசார் குறித்த வாளை கைப்பற்றினர்.

தற்போது இந்த வழக்கின் விசாரணை முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. லண்டனில் பிறந்து வளர்ந்த செளத்ரி வாடகை டாக்ஸி ஒன்றை ஓட்டி வருகிறார்.

வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் சுமார் 6 மாதங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்