பைத்தியக்காரத்தனமாக ஆடை அணிந்த மெர்க்கல்: கிண்டல் செய்த சமூகவலைதளவாசிகள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
718Shares

பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் ஆடையை சமூகவலைதளவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நேற்று தனது கணவர் ஹரியுடன், மறைந்துபோன இளவரசியின் சகோதரி திருமணத்தில் கலந்துகொண்டார். இதில், வெள்ளை நிறத்தில், நீல பூப்போட்ட கவுன் ஆடையை அணிந்திருந்தார்.

திருமணத்திற்கு நடந்துவரும்போது, ஆடையை ஒரு கையால் பிடித்தபடியே நடந்துவந்தார் மெர்க்கல். இந்நிலையில் இவரது ஆடை சமூகவலைதளவாசிகளால் கிண்டல் செய்யப்பட்டுள்ளது. நபர் ஒருவர், போர்த்திக்கொள்ளும் பெட்ஷீட்டை ஆடையாக அணிந்து வந்துள்ளார் என விமர்சனம் செய்துள்ளார்.

மற்றொரு நபர், இவர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இவரது ஆடை மோசமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.

மெர்க்கல் ஆடையால் விமர்சனத்திற்குள்ளாவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. இதற்கு முன்னரும் பாரடே நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது விமர்சனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்