ஒருவன் உங்களை தவறாகத் தொட்டால் சரியானபடி அவனுக்கு பதிலடி கொடுங்கள்: சொல்வது யார்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒருவன் உங்களை தவறாகத் தொட்டால் சரியானபடி அவனுக்கு பதிலடி கொடுங்கள் என்கிறார் பிரபல பாடகியும் நடிகையுமான Elaine Paige.

ஒருவன் உங்கள் முழங்காலிலோ பின் பக்கங்களிலோ கை வைத்தால் அமைதியாக இருக்காதீர்கள், அவனுக்கு சரியான பதிலடி கொடுங்கள் என்கிறார் அவர்.

நீங்கள் மோசமான மனிதர்களால் பாலியல் ரீதியான தாக்குதகளுக்கு உள்ளாகியிருக்கிறீர்களா என்று கேட்டதற்கு மறுக்காமல் ஆம் என்கிறார் அவர்.

பாலியல் ரீதியான தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தகாதவை என்னும் அவர் இது மாதிரியான சீண்டல்களுக்கு சரியானபடி பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அதுபோல ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் தான் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கிறார் Elaine.

“diva” என்று அழைக்கப்படுவதையும் தான் விரும்பவில்லை என்று கூறும் Elaine, ஒரு ஆணை அவ்வாறு அழைப்பார்களா என்றும் கேள்வி எழுப்புகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்