மேகன் மெர்க்கலுக்கு இளவரசர் சார்லஸ் வைத்த செல்லப்பெயர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
401Shares

பிள்ளைகளுக்கு பெயரிடும்போது மரபைப் பின்பற்றும் ஒரு முறை ராஜ குடும்பத்தில் இருந்தாலும் செல்லப்பெயர் வைப்பதிலும் அவர்கள் பேர்போனவர்கள்தாம் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக இளவரசர் சார்லஸ் தனது புது மருமகளுக்கு செல்லப்பெயர் ஒன்றை சூட்டியுள்ளார்.

பிரித்தானிய மகராணிக்கே சாஸேஜ் என்பது முதல் கேரி என்பதுவரை பல செல்லப்பெயர்கள் இருக்கின்றன.

இப்போது மேகன் தனது மாமனாரிடமிருந்தே தனது செல்லப்பெயரை பெற்றிருக்கிறார். போன மாதம் மேகனின் திருமணத்தின்போது இளவரசர் சார்லஸ் அவரது கரம் பற்றி அழைத்து வந்து ஒரு தந்தையின் பங்கைச் செய்ததே பலராலும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது அவர் தனது மருமகளுக்கு ஒரு செல்லப்பெயர் வேறு சூட்டியுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஏற்கனவே மகாராணியின் இதயத்தில் இடம் பிடித்து விட்டதை அவருடனான ரயில் பயணம் நிரூபித்த நிலையில் தற்போது தனது மாமனாருக்கும் பிரியமான மருமகளாகிவிட்டார் மேகன்.

தற்போது இளவரசர் சார்லஸ் மேகனுக்கு வைத்துள்ள பெயரைப் பார்க்கும்போது இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

அவர் மேகனுக்கு “டங்ஸ்டன்” என்னும் செல்லப்பெயரைச் சூட்டியிருக்கிறார். டங்ஸ்டன் போல் மேகன் உறுதியாகவும் வளைந்து கொடுக்காத தன்மையும் உள்ளவராக இருப்பதால் இளவரசர் சார்லஸ் மேகனுக்கு அந்த பெயரை சூட்டியுள்ளதாக ராஜ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேகனின் பலத்திற்காகவும் ஹரிக்கு பக்கபலமாக இருப்பதற்காகவும் மேகனைப் புகழும் இளவரசர் சார்லஸ், கொஞ்சம் மென்மையானவராக இருக்கும் ஹரிக்கு அவர் ஒரு பலமாக, பின்புலமாக இருப்பார் என்பதால் அந்த செல்லப்பெயரை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்