நான் இவர்களை எல்லாம் கொல்லப் போகிறேன்! லண்டன் சாலையில் கத்தியோடிய பெண்

Report Print Santhan in பிரித்தானியா
297Shares

லண்டனில் பெண் ஒருவர் நான் யூதர்களை எல்லாம் கொல்லப் போகிறேன் என்று கூறிய படி ஓடியதால், அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து கத்தியால் குத்தி கொலை செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தலைநகரின் Stamford Hill பகுதியின் Craven Park சாலையில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் சுமார் 47 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நான் யூதர்களை எல்லாம் கொல்லப் போகிறேன் என்று கத்தியோடு ஓடியுள்ளார்.

இதைக் கண்ட அப்பகுதியில் இருந்த நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட பெண் மனநிலை சரியில்லாதவர் போல் தெரிகிறது என பொலிசார் கூறியுள்ளார்.

இருப்பினும் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருவதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

அந்த பெண் கத்திக் கொண்டு ஓடிய பகுதியில் யூதர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளதாகவும், அதுமட்டுமின்றி சம்பவ இடத்தில் யூத இனத்தைச் சேர்ந்த 15 குழந்தைகள் அங்கிருக்கும் தேவாலயத்திற்கு வெளியில் இருந்ததால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோம் என்ற அச்சம் நிலவியதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்