லண்டனில் காலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: இரயில் மோதி 3 பேர் பலி

Report Print Santhan in பிரித்தானியா
251Shares

பிரித்தானியாவில் ரயில் மோதி மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Loughborough ரயில் நிலையத்திற்கு அருகில் காலையில் மூன்று பேர் இரயில் மோதி பலியாகியுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். காலை நேரத்தில் பரபரப்பு மிகுந்த Loughborough ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பலியாகியுள்ள மூன்று பேர் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 07.30 மணிக்கு இது போன்ற சம்பவம் நடந்துவிட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்ற போது, அங்கு மூன்று பேர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனால் மூன்று பேர் எப்படி இறந்தனர், என்ன காரணம் என்பது குறித்து தெரியவில்லை, அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்