என் மகள் மீது உங்கள் கையை உயர்த்தி விடாதீர்கள் ஹரி! மெர்க்கலின் தந்தை கண்ணீர் பேட்டி

Report Print Trinity in பிரித்தானியா
1158Shares

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தனது மௌனத்தை கலைத்திருக்கிறார் மேகன் மெர்க்கலின் தந்தையான தாமஸ் மெர்க்கல்.

ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நேரலையில் அவர் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து வருந்திய தாமஸ், பிரின்ஸ் சார்லஸ் தனது இடத்தில் இருந்தது மிக பெருமையாக இருந்தது என்று கூறினார்.

இருதய அறுவை சிகிச்சை காரணமாக தாமஸ் மெர்க்கலால் லண்டனுக்கு பயணப்பட முடியாமல் போனது. அதனால் திருமணத்தை அவர் தொலைக்காட்சியில் பார்த்து அழுதிருக்கிறார்.

இருப்பினும் தன் மகள் நல்ல ஒரு ஆரம்பத்தை கண்டடைந்ததாக கூறியிருக்கிறார். திருமணத்தன்று மெர்க்கல் மிக அழகாக இருந்ததாகவும் ஹரி அவருக்கு பொருத்தமான கணவராக இருப்பதாகவும் தாமஸ் கூறினார்.

திருமணத்திற்கு சில மாதங்கள் முன்பு இளவரசர் ஹரி தாமஸ் மெர்க்கலுடன் தொலைபேசியில் இந்த திருமணத்திற்கான சம்மதம் குறித்து கேட்டபோது என் மகளின் மீது உங்கள் கையை உயர்த்தி விடாதீர்கள் ஹரி, எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் அப்போதுதான் இந்த திருமணத்திற்கு நான் சம்மதிப்பேன் என்று தாமஸ் கேட்ட போது இளவரசர் ஹரி அதற்கான வாக்குறுதியை கொடுத்திருக்கிறார் .

மேலும் மெர்க்கலுக்கு குழந்தைகள் என்றால் மிக பிடிக்கும். ஆகவே மிக விரைவில் அவர்கள் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்றும் தாமஸ் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி புகைப்பட சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்த தாமஸ், தனது மகளும் மருமகனும் தன்னை மன்னிப்பார்கள் என்று நம்புவதாகவும் சொன்னார்.

திருமணத்திற்கு பின் உடல்நலம் காரணமாக இதுவரை லண்டனிற்கு செல்லாத தாமஸ் இன்னும் சில நாட்களில் புதுமண தம்பதிகளை சந்திக்க இருப்பதாக கூறினார்.

மேலும் ஹரியும் தாமஸும் பல முறை தொலைபேசியில் பேசியதாகவும் இளவரசருக்கு அரசியல் ஈடுபாடு அதிகம் என்றும் பிரெக்ஸிட் முறையை அவர் வரவேற்கிறார் என்றும் ட்ரம்பிற்கு இன்னொரு வாய்ப்பு தர வேண்டும் என்று அவர் கூறியதாகவும் தாமஸ் தெரிவித்தார்.

ஆனால் கென்சிங்டன் மாளிகை இந்த விடயங்களை பற்றி கருத்து கூற மறுத்து விட்டது.

இறுதியாக தொலைக்காட்சி பேட்டியில் திருமணத்திற்கு வராமல் போனதன் மூலம் தனது மகளையம் இளவரசர் ஹரியையும் நான் அவமதிக்கவில்லை என் உடல்நிலை காரணமாகவே இவ்வாறு நடந்தது என்று கூறினார்.

இருப்பினும் வல்லுநர்கள் கூறுகையில் மெர்க்கலின் தந்தை தாமஸ் அவர்கள் திருமணத்திற்கு வராமல் போனதால் அந்த உறவு இறந்துவிட்டதாகவே கருதப்படும் வழக்கம் அரச குடும்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்