தந்தையை புறக்கணிக்கிறார் மேகன் மெர்க்கல்! சாடிய சகோதரி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
303Shares

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலை எப்போதும் அவரது சகோதரி சமந்தா ஏதேனும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்.

மெர்க்கலுக்கு திருமணம் என்று அறிவித்த நாள் முதல், இவர் தன்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைக்க ஆரம்பித்தார். மெர்க்கல் அரச குடும்பத்திற்கு பொருத்தமற்றவர் என்றும் அவள் எங்கள் குடும்பத்தை உதாசினப்படுத்தியுள்ளார்.

மேலும், தனது தந்தையையும் அவள் கண்டுகொள்வதில்லை என தொடர்ந்து குறைக்கூறிக்கொண்டு வந்தார். , இந்நிலையில் நேற்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தை தாமஸ் மெர்க்கலுக்கு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதனுடன் சேர்த்து மனிதாபிமானிகள் தங்கள் தந்தையை புறக்கணிப்பதில்லை என பதிவிட்டு, மேகன் மெர்க்கலின் பெயரை சேர்த்துள்ளார்.

நேற்று மேகன் மெர்க்கல் தனது கணவருடன் டயானாவின் அக்கா மகள் திருமணத்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்