தடுமாறி விழுந்த மேகன் மெர்க்கல்: கெட்டியாக பிடித்துக் கொண்ட கணவர் ஹரி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

உறவினர் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற இடத்தில் தடுமாறி விழவிருந்த மெர்க்கலை கெட்டியாக பிடித்து இளவரசர் ஹரி காப்பாற்றியுள்ளார்.

மில்லியன் கணக்கில் குழுமியிருந்த உறவினர்கள் முன்னிலையில் நடக்கவிருந்த அசம்பாவிதத்தில் இருந்து தமது காதல் கணவரின் சமயோசித முடிவால் மேகன் மெர்க்கல் நிம்மதியடைந்தார்.

மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் சகோதரியான சாராவின் மகள் திருமணத்திற்கு இளவரசர் ஹரி தமது மனைவி மெர்க்கலுடன் சென்றிருந்தார்.

விழா மேடைக்கு செல்லும் வழியில் உள்ள பாதையில் இருவரும் கைகோர்த்து சென்ற போது தான் மெர்க்கல் தடுமாறி விழ இருந்தார்.

வெள்ளை நிற குதிகால் செருப்பு அணிந்திருந்த மேகன் மெர்க்கல், புல்வெளி என்பதால் தடுமாறியுள்ளார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு கணவர் ஹரியின் கை கோர்த்தபடி மெதுவாக நடந்து சென்றுள்ளார்.

இளவரசி டயானா தமது திருமணத்தின்போது அணிந்திருந்த அதே கிரீடத்தை குறித்த திருமண விழாவில் மணப்பெண்ணும் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்