விண்வெளிக்கு செல்லும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்

Report Print Trinity in பிரித்தானியா
61Shares

பிரபல அறிவியலாளர் மற்றும் பேராசிரியருமான விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல் விண்வெளிக்கு செல்ல இருக்கிறது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவரது குரலை விண்வெளியில் உள்ள கருந்துளை ஒன்றிற்கு அனுப்ப போகிறார்கள்.

இங்கிலாந்தில் பிறந்து தனது வாழ்நாள் முழுவதும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக செலவிட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். பல விண்வெளி ஆராய்ச்சிகளை செய்தவரும் கூட .

இவரின் பிக் பாங் எனும் பெரு வெடிப்பு , கருந்துளை கொள்கைகளை இப்போதும் ஆராய்ந்து வருகின்றனர்.

இவரின் கொள்கை பிக் பாங் எனும் பெருவெடிப்பின் மூலம் ஆரம்பித்த உலகம் ஒரு ப்ளாக் ஹோல் எனப்படும் கருந்துளை மூலம் அழியும் என்பது தான்.

இவரை ஐன்ஸ்டின் மற்றும் நியூட்டனிற்கு இணையானவராக அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆகவே இவர்கள் இருவரது கல்லறைக்கு நடுவில்தான் ஸ்டீபன் ஹாக்கிங் தற்போது புதைக்கப்பட்டிருக்கிறார்.

இவரின் குரல்கள் பல பத்திரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, இவரின் குரலை வாங்கிலிஸ் எனும் கிரீஸ் நாட்டு இசையமைப்பாளர் பாடலாக மாற்றியிருக்கிறார்.

நடுநடுவே இவரது உரையாடலும் வருகிறது, இந்த பாடல் வெளியான பிறகு அமைதிக்கான குரலாக ஸ்டீபன் ஹாக்கிங் குரல் பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் விஞ்ஞானிகள் இந்த பாடலை தற்போது விண்வெளிக்கு அனுப்ப முயற்சித்து வருகின்றனர். பூமியில் இருந்து 3500 ஒளி தூரத்தில் இருக்கும் ஒரு கருந்துளை ஒன்றிற்கு இவரது குரலை அனுப்ப போகிறார்கள்.

அந்த கருந்துளையின் வடிவமானது இந்த குரலை மறுபடி மறுபடி ஒலிக்க செய்யும் வகையில் இருக்கிறது. ஆகவே உலகம் இருக்கும்வரை ஸ்டீபன் ஹாக்கிங் குரல் அங்கு கேட்டு கொண்டே இருக்கும்.

இது கருந்துளைகளை பற்றி தனது வாழ்நாள் முழுதும் செலவழித்த ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு செய்யப்படும் மிக மரியாதையாக பார்க்கப்படுகிறது.

இந்த ஒலி விண்வெளிக்கு அனுப்பப்படும் அதே நாளில் அந்த பாடலை உடலை அறிமுகப்படுத்துவதாக இந்த விஞ்ஞானிகள் குழு சொல்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்