முழுவதுமாக மாறிவிட்டார் மேகன் மெர்க்கல்: மகாராணி பாராட்டு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
404Shares
404Shares
ibctamil.com

அமெரிக்க நடிகையாக இருந்து பிரித்தானிய அரச குடும்பத்து மருமகளாகிவிட்ட மேகன் மெர்க்கல், அரச குடும்பத்திற்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றக்கொள்வாரா? என்ற அதிக எதிர்பார்ப்புகள் அவர் மீது இருந்தன.

ஆனால், திருமணத்திற்கு பின்னர் மகாராணியுடன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனியாக கலந்துகொண்டதன் மூலம், அவர் முழுவதுமாக அரச குடும்பத்து மருமகளாக மாறிவிட்டார் என கூறப்படுகிறது.

Chester - இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மெர்க்கலின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்துள்ளது. நிகழ்ச்சியில் அனைவரிடமும் மரியாதையாக நடந்துகொண்ட விதம், பிரித்தானிய மகாராணிக்கும் பிடித்துவிட்டதால், அவர் மெர்க்கலை பாராட்டியுள்ளார்.

மேலும், ஆடை விடயத்திலும் நாகரீமாக இருந்துள்ளார். ஏனெனில் இதற்கு முன்னர், பாரடே நிகழ்ச்சியில் தோள்பட்டை தெரியும்படி ஆடை அணிந்து அரச குடும்பத்து விதியை மீறியுள்ளார் என விமர்சனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்