அப்பாவியாக வந்து அமெரிக்காவைக் கலக்கிய பிரித்தானியக் குட்டிப் பெண்: வைரல் வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா
278Shares
278Shares
ibctamil.com

அமெரிக்காவில் நடைபெற்று வருகின்ற America's Got Talent என்னும் பிரபல நிகழ்ச்சியில் ஆடிஷனுக்காக வந்த பிரித்தானியக் குட்டிப் பெண் ஒருத்தியின் பாடல் அமெரிக்காவை மட்டுமல்ல இணையத்தையே கலக்கி வருகிறது.

Courtney Hadwin என்னும் அந்த 13 வயது பெண் மிகவும் அப்பாவியாக மேடையில் வந்து நின்றாள்.

அவளிடம் நடுவர்கள் அறிமுகக் கேள்விகள் கேட்கும்போது தனக்கு சற்று படபடப்பாக இருப்பதாகத் தெரிவிக்கிறாள். நடுவர்களில் ஒருவர் அவளை தைரியப்படுத்துவதோடு பல கேள்விகளைக் கேட்டு அவளது பதற்றத்தைப் போக்க முயல்கிறார்.

ஒரு வழியாக பாட தயாராகிறாள் அந்த குட்டிப்பெண். இசை இசைக்க ஆரம்பிக்கிறது, அவ்வளவுதான் மேடையில் அப்படி ஒரு பூகம்பம்.

அப்பாவியாக வந்த அந்தப் பெண்ணா இவள் என அனைவருமே அசந்து போகும் அளவிற்கு அப்படி ஒரு பாடலை அதுவும் துள்ளிக் குதித்து மேடை முழுவதும் ஓடிக் கொண்டே அவள் பாட அரங்கமே அதிர்கிறது.

நடுவர்கள் அனைவரும் எழுந்து ஆரவாரிக்கிறார்கள்.

அவள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டதாக நடுவர்களில் ஒருவர் அறிவிக்க, நன்றி என்று கண்ணீர் மல்க அவள் கூற, இல்லை இவ்வளவு நல்ல பாடலைக் கொடுத்த உனக்குத்தான் நன்றி என்கிறார் அந்த நடுவர்.

அவள் பாடி ஆடும் அந்த வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்