மெர்க்கலுக்கு இளவரசர் ஹரி வழங்கிய அறிவுரை

Report Print Raju Raju in பிரித்தானியா
303Shares
303Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மெர்க்கலுக்கு உடைகளை பேஷனாக அணிவது குறித்து அறிவுரை வழங்கி வருவது தெரியவந்துள்ளது.

மெர்க்கல் எப்போதும் அழகான மற்றும் வித்தியாசமான உடைகளை அணிவதில் ஆர்வம் கொண்டவராவார்.

தற்போது அரச குடும்ப உறுப்பினராக அவர் ஆகியுள்ளதால் உடைகள் விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மெர்க்கலுக்கு என தனியாக ஆடை வடிவமைப்பாளர்கள் உள்ளனர். முக்கியமாக ஸ்டெல்லா மெக்கார்ட்னி என்பவர் தான் மெர்க்கலுக்கு அதிகமாக ஆடைகளை வடிவமைத்துள்ளார். மெர்க்கலின் திருமண ஆடையை தயார் செய்தது அவர் தான்.

இந்நிலையில் இன்னொரு முக்கிய நபர் மெர்க்கல் ஆடை விடயத்தில் கவனம் செலுத்தி வருகிறார், அது அவரின் கணவர் இளவரசர் ஹரி தான்.

ஆம் எது போன்ற பேஷனான ஆடைகளை மெர்க்கல் அணிய வேண்டும் என அவர் தான் தற்போது மனைவிக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.

இதனால் மெர்க்கலின் எதிர்பாராத ஆடை வடிமைப்பாளர் ஹரி என பலர் சொல்கிறார்கள்.

மேலும் மெர்க்கலின் தலைமுடி விடயத்திலும் ஹரி அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்