நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரே நாளில் 600 பலாத்கார மிரட்டல்கள்: இதுதான் காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
148Shares
148Shares
ibctamil.com

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான Jess Phillipsக்கு ஒரே நாளில் 600 பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

Birmingham Yardley Labour நாடாளுமன்ற உறுப்பினரான Jess Phillipsக்கு ஒரே இரவில் 600 பலாத்கார மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் தினந்தோறும் பயங்கர மிரட்டல்களுக்குள்ளாவதாகவும் அவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணைய சேவை வழங்குபவர்களுக்கு தங்கள் உண்மையான அடையாளத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அதே நேரத்தில் தீமையை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமலே இருப்பது நல்லது என்கிறார் அவர்.

HOUSE OF COMMONS

ஒரு பெண்ணியவாதியாக நீங்கள் பேசும்போது இத்தகைய மிரட்டல்களை நீங்கள் ஏராளம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு அளவுக்கு மேல் தனக்கு வரும் மிரட்டல்களை எண்ணுவதை தான் நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

G7மாநாட்டில் பிரித்தானிய பிரதமரான தெரசா மேயும் பெண்கள் மீதான விரும்பத்தகாத மோசமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த இணைய ஜாம்பவான்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்