விவாகரத்து செய்த மில்லியனர் கணவரிடம் மனைவி கேட்ட ஜீவனாம்சம்: அதிர்ந்த கணவர்

Report Print Raju Raju in பிரித்தானியா
158Shares
158Shares
ibctamil.com

லண்டனை சேர்ந்த கணவர் விவாகரத்து செய்த தனது மனைவிக்கு ஏற்கனவே £1 மில்லியன் பணம் கொடுத்த நிலையில், அவர் மேலும் £1.35 மில்லியன் பணம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மில்லியனர் ஒருவர் தனது மனைவி மற்றும் டீன் ஏஜ் மகள்களுடன் வசித்து வந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டார் அவரை விவாகரத்து செய்துள்ளார்.

இதையடுத்து ஜீவனாம்சத்துக்காக நீதிமன்றத்தை நாடிய மனைவி தனக்கு வீடு வேண்டும் என கூற நீதிமன்றம் £1 மில்லியன் பணத்தை மனைவிக்கு கொடுக்க மில்லியனருக்கு உத்தரவிட்டது.

அதன்படி £1 மில்லியன் பணத்தை அவர் கொடுத்தார்.

இந்நிலையில் மனைவி வாங்கிய வீட்டில் படுக்கையறைகள் சிறியதாக இருந்துள்ளது.

இதையடுத்து தனது டீன் ஏஜ் மகள்கள் உயரமாக இருப்பதாகவும், அவர்களுக்கு படுக்கையறைகள் அளவு போதுமானதாக இல்லை எனவும் மனைவி மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேலும் தனக்கு வேறு வீடு வாங்க கணவர் பணம் தர கோரியுள்ளார்.

ஆனால் இதற்கு ஒத்து கொள்ளாத மில்லியனர் பணம் தர முடியாது என நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனைவிக்கு மில்லியனர் £1.35 பணத்தை மீண்டும் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இது கணவருக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அரைமனதுடன் சம்மதித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்