பிரித்தானிய மக்களால் அதிகம் கவரப்பட்ட இளவரசி டயானா பற்றிய ஒரு தகவல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
389Shares
389Shares
ibctamil.com

பிரித்தானிய அரச குடும்பத்து மருமகள்கள் தற்போது அதிகமாக மறைந்துபோன இளவரசி டயானாவின் நகைகளை அதிகம் விரும்பி அணிய ஆரம்பித்துள்ளனர்.

பிரித்தானிய மக்களால் அதிகம் கவரப்பட்ட இளவரசி டயானா, கேட் மற்றும் மெர்க்கல் ஆகிய இருவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்.

இன்று வரை இளவரசி டயானாவின் மரணம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற மர்மம் விலகாமல் நீடிக்கிறது. இவரது மரணத்தில் மட்டுமல்ல, இவரது சிகையலங்காரத்திற்கு பின்னணியிலும் கூட இரகசியங்கள் மறைந்திருக்கின்றன.

பிரபல அழகுகலை நிபுணரான சாம் மேக்நைட் ஹேர் பை சாம் மேக்நைட் என்ற புத்தகத்தில் டயானாவின் சிகை அலங்காரம் குறித்த ரகசியங்களை கூறியுள்ளார்.

1990 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் வோக் நாளிதழ்காக டயானா போஸ் கொடுக்க கேட்டுகொண்டனர்.

அப்போது புகைப்பட கலைஞர் பேட்ரிக் என்பவர் தனது சொந்த மேக்கப், ஸ்டைலிஸ்ட் குழுவையே அழைத்து வர ஒப்புதல் பெற்றிருந்தார். அந்த குழுவில் சாம் மேக்நைட்டும் ஒருவர்.

அப்போது அவர் டயானா எனத் தெரியாமல், அவரை அழகுப்படுத்த சென்றுள்ளார். அப்போது அவரது சிகை அலங்காரம் நன்றாக இல்லை என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அப்போது டயானா, எப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் என கேட்க, ஷார்ட் கட் ஹேர் ஸ்டைல் தான் பொருத்தமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதன் முன்பு வரை சற்று நீளமான கூந்தல் வைத்திருந்த டயானா, ஷார்ட் கட் ஹேர் ஸ்டைலுக்கு மாறினார். இன்று வரை டயானா என்றால் மக்களுக்கு சட்டென்று நினைவிற்கு வருவது அவரது ட்ரேட்மார்க் சிகை அலங்காரம் தான்.

ப்ரைவேட் போடோஷூட் போது பெரிதும் பதட்டம் இல்லை என்ற போதிலும், முதல்முறையாக பொது நிகழ்விற்கு செல்லும் போது டயானா சற்று பதட்டமாக தான் இருந்தார்.

ஆனால், இவரது அந்த ஷார்ட் கட் ஹேர் ஸ்டைல் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்டது என்பது தான் உண்மை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்