திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக அரசு முறைப்பயணம் செல்லும் ஹரி-மெர்க்கல்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா
311Shares
311Shares
ibctamil.com

பிரித்தானியா இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல் அரசு முறைப்பயணமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்லவுள்ளதாக கிங்ஸ்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரி தன்னுடைய காதலியும், நடிகையுமான மெர்க்கலை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இளவரசர் ஹரி-மெர்க்கல் ஜோடி அரசு முறைப்பயணமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து செல்லவுள்ளனர்.

இளவரசர் ஹரி பெற்றோரை அப்படியே பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

ஆம் கடந்த 1983-ஆம் ஆண்டு இளவரசி டயானா-இளவரசர் சார்லஸ் திருமணத்திற்கு பின் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சென்றதாகவும், வெளிநாடுகளில் அவர்கள் 41 நாட்கள் தங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் 2014-ஆம் ஆண்டு ஹரியின் சகோதரரும் அவரது மனைவியும் இளவரசியுமான கேட் மிடில்டனும் இந்த இரண்டு நாடுகளில் 18 நாட்கள் தங்கியதாக உள்ளுர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்