லண்டனில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்! இரயில் நிலையத்திற்கு வெளியே 30 வயது நபர் குத்தி கொலை

Report Print Santhan in பிரித்தானியா
557Shares
557Shares
ibctamil.com

லண்டனில் ரயில் நிலையத்திற்கு வெளியே 30 வயது மதிக்கத்தக்க நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே கத்தியால் தாக்கப்படுதல் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் போன்றவை நடைபெற்று வருகிறது.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு லண்டனில் கத்தியால் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் லண்டன் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வடக்கு லண்டனின் Turnpike Lane station-க்கு வெளியே இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.45 மணிக்கு 30 வயது மதிக்கத்தக்க நபரை, மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் அந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தாண்டு மட்டும் நாட்டின் தலைநகரில் 74 பேர் துப்பாக்கி சூடு சம்பவம் மற்றும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்