மின்னல் தாக்கிய அதே வேகத்தில் பற்றி எரிந்த வீடு: அதிர்ச்சி வீடியோ

Report Print Trinity in பிரித்தானியா
248Shares
248Shares
ibctamil.com

ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள Dunbartonshire எனும் பகுதியில் மின்னல் தாக்கியதால் திடீரென வீடு ஒன்று பற்றி எரிந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனால் அதிர்ந்து போன லென்ஸி பகுதி மக்கள் உடனடியாக அந்த நிகழ்வை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

மின்னல் தாக்கிய அடுத்த நொடியே வெடித்து சிதறிய வீட்டின் வீடியோ அனைவரையும் பதட்டத்திற்குள்ளாகியது.

தகவல் அறிந்ததும் உடனடியாக வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் மிகுந்த போராட்டத்திற்கிடையில் தீயை அணைத்தனர்.

வீட்டின் மேல்மாடியில் தீ பற்றியதால் வீட்டில் இருந்தோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தி மெட் அலுவலகம் இதற்கு முன்பாக வானிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது அதில் தீவிரமான புயல் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்ய கூடும் என்றும் மதியம் 12இல் இருந்து இரவு ஒன்பது மணிக்குள் இது நடக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோ ஆகியவையம் அடங்கும்.

நொடி நேரத்திற்குள் மின்னல் பட்டதால் ஒரு வீடே எரிந்து சாம்பலாகிய விபரீதத்தை நேரில் பார்த்தவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்