பட்டப்பகலில் துப்பாக்கி குண்டுக்கு பலியான பிரித்தானிய இளைஞர்: அச்சத்தில் பொதுமக்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் நடந்த குறித்த படுகொலை தொடர்பில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பர்மிங்காம் நகரில் உள்ள மேக்ஸ்வெல் அவென்யூ பகுதியில் மாலை 5 மணி அளவில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரை பொலிசார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து மருத்துவ உதவிக் குழுக்களின் உதவியுடன் குறித்த இளைஞரின் உயிரை காக்க போராடியுள்ளனர்.

ஆனால் சம்பவயிடத்திலேயே குறித்த இளைஞரின் உயிர் போனதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

20 வயதேயான இளைஞர் துப்பாக்கி குண்டுக்கு பலியானது துயரமான விடயம் என கூறியுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர்,

குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் இருக்காது என உறுதி அளித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லண்டன் நகரத்தை பொறுத்தமட்டில் கடந்த நான்கு நாட்களாக இளைஞர்கள் 4 பேர் கத்திக் குத்து சம்பவத்தில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்