இளவரசர் ஹரி - மெர்க்கல் வரவேற்புக்கு பயன்படுத்திய காரின் சோகக் கதை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கடந்த சனிக்கிழமை திருமணத்திற்குப் பின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக இளவரசர் ஹரி - இளவரசி மெர்க்கல் பயன்படுத்திய 350,000 பவுண்டுகள் மதிப்புள்ள எலக்ட்ரிக் ஜாகுவார் காரின் பின் ஒரு சோகக் கதை இருக்கிறது.

ஸ்டைலான அந்த E-type கார் எலக்ட்ரிக் காராக மற்றப்பட்டது. Jamiroquai என்னும் இசைக்குழுவில் ஒருவரான musician Toby Grafftey-Smith என்பவருக்கு சொந்தமானது அந்த கார்.

புற்று நோயுடன் ஆறு வருடங்கள் போராடிய அவர் கடந்த ஆண்டு தனது 46 ஆவது வயதில் உயிரிழந்தார்.

Tobyயின் மரணத்திற்குப்பின் அவரது மனைவி அந்தக் காரை விற்று விட்டார்.

அதை யார் வாங்கியது என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எப்படியும் இறுதியில் அது ராஜ குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்துள்ளது.

அந்த கார் LED ஹெட் லைட்கள் கொண்ட 1968 மாடலின் பேட்டரியால் இயக்கப்படும் வெர்ஷனாக உள்ளதால் புகையை வெளியிடாது, எனவே காற்று மாசு ஏற்படுத்தாது.

1961க்கும் 1975க்கும் இடையே தயாரிக்கப்பட்ட அந்த கார், Enzo Ferrariயால் உலகிலேயே மிகவும் அழகான கார் என வர்ணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன் மதிப்பு 350,000 பவுண்டுகள் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers