இளவரசர் ஹரி-மெர்க்கல் மோதிரம் மாற்றிய தருணம்: மிகவும் உணர்ச்சிவசப்பட்ட முன்னாள் காதலி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி தன்னுடைய திருமணத்திற்கு முன்னாள் காதலியான செல்சி தவியை அழைத்திருந்தார்.

திருமணத்திற்கு வந்திருந்த அவரின் உடையை பற்றி அங்கிருக்கும் ஊடகங்கள் பெரிய அளவில் பேசின.

இந்நிலையில் திருமணத்திற்கு வந்திருந்த செல்சி தவி, ஹரி மற்றும் மெர்க்கல் மோதிரம் மாற்றிய போது தன்னை அறியாமல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

திருமணத்தின் அனைத்து நிகழ்வுகளும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால், செல்சி தவியின் முகபாவனைகளும் அதில் சிக்கியுள்ளது.

அதைக் கண்ட இணையவாசிகள் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

செல்சி தவியும், இளவரசர் ஹரியும் 2005-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை காதலித்து வந்தனர். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதையடுத்து ஹரி நடிகை மெர்க்கலை காதலிப்பதாக கூறினார். இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்