திருமணத்தில் ஆயிரம் பேருக்கு மத்தியில் ஆப்பிரிக்க நண்பனை கண்டுபிடித்த இளவரசர் ஹரி: நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி தன்னுடைய திருமணத்தின் போது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நண்பனை கையசைத்து காட்டியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் கடந்த 19-ஆம் திகதி கோலகலமாக நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் வின்ஸ்டர் வீதியில் ஹரி-மெர்க்கல் குதிரை வண்டியில் ஊர்வலம் சென்ற போது, மெர்க்கல் தன்னுடைய முன்னாள் ஆசிரியரை பார்த்து வியப்படைந்தார்.

இந்நிலையில் இளவரசர் ஹரி தன்னுடைய ஆப்பிரிக்க நண்பனான Mutsu Potsane(18)-ஐ திருமணத்திற்கு அழைத்திருந்தார்.

அப்போது வின்ஸ்டர் கேஸ்டர் தேவலாயத்திற்குள் நுழைவதற்காக ஹரி சென்ற போது, அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்த்து தெரிவிக்க காத்திருந்தனர்.

அப்போது ஹரி தன்னுடைய ஆப்பிரிக்க நண்பனான Mutsu Potsane-ஐ விரலை காட்டி செய்கை செய்துள்ளார். அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரி கடந்த 2004-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் Lesotho உள்ள Mants’ase Children’s இல்லத்திற்கு சென்ற போது, Mutsu Potsane(18) ஹரிக்கு அறிமுகமாகியுள்ளார்.

அங்கு இருவரும் ஒன்றாக மரம் நட்டு வைத்தது போன்ற புகைப்படங்கள் எல்லாம் அப்போது பத்திரிக்கைகளில் வந்தன. அதன் பின் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருவதால், ஹரி அவரை திருமணத்திற்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Mants’ase Children’s இல்லத்தில் பெற்றோர் இல்லாத குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் 4 வயதில் இளவரசர் ஹரிக்கு அறிமுகமான Mutsu Potsane-க்கு தற்போது வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்