அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் சிந்தி உருக்கமாக பேசிய இளவரசர் ஹரி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது திருமண வரவேற்பின் போது கண்ணீர் மல்க தனது தாய் டயானாவின் நினைவுகளை உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் Frogmore இல்லத்தில் ஹரி - மெர்க்கல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு மகாராணி எலிசபெத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

1968 ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிடப்பட்ட பச்சை வண்ண ஜாகுவார் காரில் புதுமண தம்பதிகள் விழாவுக்கு சென்றுள்ளனர்.

திருமண வரவேற்பில் வந்திருந்த விருந்தினர்கள் முன்னிலையில் ஹரி பேசியதாவது, இந்த நேரத்தில் எனது தாய் இல்லாதது எனக்கு இழப்பாக இருக்கிறது. ஆனாலும், அவரது ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும்.

மேலும், மெர்க்கலை திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதம் தெரிவித்ததற்கு மெர்க்கலின் தாய் Doria Ragland க்கு நன்றி தெரிவித்தார். அனைவர் முன்னிலையிலும் மெர்க்கல் எனது மனைவி என அறிமுகப்படுத்தி பெருமிதம் கொண்டார்.

திருமண விருந்தில் தனது தாய் டயானாவின் நெருங்கிய தோழர் Elton John- யிடம் பியானோ வாசிக்க கேட்டுக்கொண்டார்.

“The Circle of Life, Tiny Dancer, Our Song மற்றும் I’m Still Standing ஆகிய நான்கு பாடல்களுக்கு விருந்தினர்கள் நடனம் ஆடினர்.

மேலும், இளவரசர் வில்லியம் தனது தம்பி ஹரியிடம் உனக்கு திருமணமாகிவிட்டதால் இனி நீ கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்