முதல் முறையாக பிரித்தானிய அரச குடும்ப கோட்பாட்டை மீறிய ஹரி - மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

உலகமே எதிர்பார்த்த பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

600 சிறப்பு விருந்தினர்கள் உள்பட 2,500 பேர் மட்டுமே இந்த திருமண நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர்.

திருமணம் நடைபெற்ற St.George's Chapel ஆலயத்தினுள் தொலைபேசி பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை.

800 இருக்கைகள் கொண்டிருக்கும் ஆலயத்தின் வலதுபுறம் மணமகன் உறவினருக்கானது, இடதுபுறம் மணமகள் உறவினருக்கானது. அதிலும் முன்வரிசையில் இருக்கும் இருக்கைகள் மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே.

ராணி எலிசபெத் வருகையின்போது அனைவரும் தலை தாழ்த்தி வணங்க வேண்டும். திருமணத்தின்போது பெரும்பாலானவர்கள் புதியவர்களாக இருப்பார்கள். எனவே, அறிமுகத்தின்போது ராணி எலிசபெத் முன் தலை தாழ்த்தி வணங்கி, `யுவர் மெஜெஸ்டி' என்று கூறி அழைக்க வேண்டும்.

குறிக்கப்பட்ட திருமண நிகழ்வு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அனைவரும் அவரவர் இடத்துக்கு வர வேண்டும். ராணி எலிசபெத்தின் வருகைக்கு முன்னதாகவே அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.

பிரித்தானிய அரச குடும்ப திருமண நிகழ்வு, வார நாளில்தான் நடைபெறும், வார இறுதியில் நடைபெறாது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற வில்லியம்மின் திருமணம் கூட வார நாளான வெள்ளிக்கிழமையில் தான் நடைபெற்றது. ஆனால், இந்தக் கோட்பாட்டை முதன்முறையாக மீறியரவர்கள் இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கல்.

இவர்களின் திருமணம் வார இறுதி நாளான சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்