22 ஆண்டுகளுக்கு முன்பு அரண்மனையின் வெளியே சுற்றுலாபயணி: இன்று பிரித்தானியாவின் இளவரசி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

அமெரிக்க நடிகையாக இருந்து இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொண்டதன் மூலம் பிரித்தானிய அரச குடும்பத்தில் முதல் கருப்பின கலப்பின இளவரசி என்ற பெருமையை பெற்றுள்ளார் மெர்க்கல்.

மேகன், அடிப்படையில் ஒரு சமூக ஆர்வலர். சமூகப் பிரச்னைகள் குறித்து அடிக்கடி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்வது அவரது வழக்கம்.

பெண்ணியம், பெண் முன்னேற்றம், பெண்களின் சம உரிமை குறித்து மெர்க்கலின் கருத்துக்கள் அவரை டயானாவுடன் ஒப்பிட்டு பிரித்தானிய மக்களை பார்க்க வைத்துள்ளது.

ஏனெனில் பிரித்தானிய இளவரசிகளிலேயே மக்களுக்கு அதிக சேவைகள் செய்து கவரப்பட்டவர் டயானா. இதன் காரணத்தினாலேயே இவர் மக்களின் இளவரசி என அழைக்கப்பட்டார்.

எனவே, டயானாவுக்கும், மெர்க்கலுக்கும் ஒற்றுமை இருப்பதாக பிரித்தானிய மக்கள் கூறுகின்றனர்.

மேலும், மற்றொரு சுவாசியமாக பலரது கவனத்தை பெற்றது பர்க்கிங்காம் அரண்மனையின் முன்பு, 22 ஆண்டுகளுக்கு முன்னர் மெர்க்கல் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

ஆம், சுற்றுலா பயணியாக 15 வயதில் தனது தோழியுடன் பர்க்கிங்காம் அரண்மனை முன் மெர்க்கல் அமர்ந்திருக்கிறார். சுமார் 22 வருடங்களுக்கு பிறகு அந்த அரண்மனையைச் சேர்ந்த இளவரசர் ஹரியை மெர்க்கல் திருமணம் செய்திருக்கிறார்.

நிச்சயம் இது கனவு வாழ்க்கைத்தான் என்று பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்