பிரித்தானியாவில் மக்கள் இருக்கும் பகுதியில் சிங்கம் உலா வருகிறதா? வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வீதி ஒன்றில் சிங்கம் நடந்து செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பிரித்தானியாவின் West Midlands பகுதியின் Oldbury-ல் உள்ள வீட்டில் இருந்த சிசிடிவி காமெராவில் சிங்கம் ஒன்று வீதியில் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

இது குறித்து அந்த வீட்டில் இருந்த Dawn Paige(53) கூறுகையில், வீட்டின் வெளியே இருந்து ஏதோ உருட்டுவது போன்ற சத்தம் வந்தது.

நான் ஏதோ குழந்தைகள் தான் விளையாடுகின்றனர் என்று பார்த்த போது, அங்கிருந்த குப்பை தொட்டிக்கு அருகில் சுமார் 1 மீற்றர் நீளம் கொண்ட பெண் சிங்கம் ஒன்று நடந்து சென்றது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் சிங்கமாக இருக்காது, பெரிய நாயாக இருக்கும் நம் கண்ணுக்கு தான் அப்படி தெரிகிறது என்று மீண்டும் தன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது அது சிங்கம் போன்று தெரிந்தது.

இது குறித்த சிசிடிவி காட்சியை நான் மற்றவர்களிடமும் காட்டிய போது அவர்களும் இது நாய், பூனைப் போன்று தெரியவில்லை சிங்கம் தான் என்று கூறினர்.

அதுமட்டுமின்றி அவர் வீட்டிலிருந்து சில கி.மீற்றர் தொலைவில் தான் Dudley Zoo உள்ளது. இதனால் அங்கிருந்து ஏதேனும் விலங்குகள் தப்பி வந்திருக்குமோ என்ற சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் அங்கிருக்கும் அதிகாரிகள் தங்கள் சரணாலயத்தில் உள்ள விலங்குகள் பத்திரமாக இருப்பதாகவும், சிசிடிவி கேமராவில் இருப்பது நிச்சயமாக சிங்கம் அல்லது புலியாகத் தான் இருக்கும் என்று கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்