திருமண கேக்காக மாறி பிரித்தானிய மக்களை குஷிப்படுத்திய ஹரி- மெர்க்கல் ஜோடி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணம் நாளை லண்டனில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லாரா மான்சன் என்பவர் ஹரி திருமணத்திற்கு கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

ஜஸ் மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட இந்த கேக்கானது 250 மணி நேரம் செலவிட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 300 முட்டைகள், 12 கிலோ பட்டர் மற்றும் 15 கிலோ மாவு கலந்து தயாரிக்கப்பட்டது.

இதில் ஒரு பிரேமின் மேல் கேக், சாக்லேட் மற்றும் ஜஸ் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பிரேமை தவிர அனைத்தையும் உண்ணலாம்.

ஹரி- மெர்க்கல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த கேக் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்