இளவரசர் சார்லஸ்க்கு ஒரு மகள் கிடைத்து விட்டாள்: கொண்டாடும் பிரித்தானியர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளவரசர் ஹரியின் வருங்கால மனைவி மேகன் மெர்க்கலின் தந்தை அவரது திருமணத்தில் பங்கேற்காததால் அவருக்கு பதிலாக ஒரு தந்தையின் கடமையைச் செய்ய இளவரசர் சார்லஸை மேகன் கேட்டுக்கொள்ள, அவர் அதற்கு சம்மதித்தது பிரித்தானிய மக்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்துள்ளது.

இளவரசர் சார்லஸ்க்கு ஒரு மகள் இல்லை, இப்போது மெர்க்கலை கரம்பிடித்து அழைத்து செல்வதில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார், அவருக்கு ஒரு மகள் கிடைத்து விட்டாள் என்று மக்கள் சமூக ஊடகஙகளில் பாராட்டு செய்திகளாக குவித்து வருகிறார்கள்.

அதேபோல் தன் தந்தையின் இடத்தில் தனது வருங்கால மாமனாரைத் தேர்வு செய்ததற்காக மெர்க்கலுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சிலர், மெர்க்கலின் தாய்தான் அவரை அழைத்து வருவார் என்று எண்ணிக்கொண்டிருந்தோம், ஆனால் இளவரசர் சார்லஸே வருகிறார் என்பது அருமையான விடயம், மெர்க்கல் தனது வருங்கால மாமனாரை தேர்வு செய்தது அற்புதமான விடயம் என்றால் அதற்கு அவர் சம்மதித்தது அதைவிட அருமையான விடயம் என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இளவரசர் சார்லஸ்க்கு தனது வருங்கால மருமகளாகிய மேகன் மெர்க்கல் மீது அதிக பாசம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்