திருமண நிகழ்வில் மணமகளை கரம்பிடித்து அழைத்து வரப்போவது இவர் தானாம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தில் இளவரசர் சார்லஸ் மெர்க்கலை கரம் பிடித்து அழைத்து வருவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.

அதன்படி நாளை Windsor Castle-ன் St George's Chapel-ல் நடக்கவிருக்கும் திருமண நிகழ்வில் இளவரசர் சார்லஸ், மேகன் மெர்க்கலை கரம் பிடித்து அழைத்து வந்து இளவரசர் ஹரியிடம் ஒப்படைப்பார்.

பொதுவாக இந்த விடயத்தை பாரம்பரிய வழக்கப்படி மணப்பெண்ணின் தந்தை தான் செய்வார், ஆனால் மெர்க்கல் தந்தை திருமண நிகழ்வில் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மெர்க்கலின் தாய் இந்த சம்பிரதாயத்தை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சார்லஸ் இதை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்