மில்லியன் பார்வையாளர்களால் அண்ணனை முந்துவாரா இளவரசர் ஹரி? உச்சக்கட்ட எதிர்பார்ப்பு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

நாளை நடபெறவிருக்கும் (மே 19 ஆம் திகதி) பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தை மில்லியன் கணக்கானோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி, ITV மற்றும் Sky தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற வில்லியம்- கேட் திருமணத்தை சுமார் 26 மில்லியன் பேர் நேரலையில் கண்டுகளித்தனர்.

எனவே, இந்த எண்ணிக்கையை ஹரி முறியடிப்பாரா? அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வாக ஹரியின் திருமணம் அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலகளவில் Sky One, Sky News, ITV மற்றும் BBC ஆகிய தொலைக்காட்சிகள் ஹரியின் திருமணத்தை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

பிற தொலைக்காட்சி ஊடகங்களை ஒப்பிடுகையில், பிபிசி தொலைக்காட்சியில் மட்டும் இளவரசர் வில்லியம் திருமணத்தை 13.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

அதுமட்டுமின்றி வில்லியம்மின் திருமணம் வெள்ளிக்கிழமையில் நடைபெற்றது, அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஹரியின் திருமணம் சனிக்கிழமை நடைபெறுகிறது, அன்றைய தினம் FA Cup போட்டியின் இறுதிப்போட்டி நடைபெறுவதால், பார்வையாளர்கள் சிதறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.

எங்களது பிபிசி தொலைக்காட்சியில் நேரலலையாக ஒளிபரப்பாகும் ஹரியின் திருமணத்தை சுமார் 19.4 மில்லியன் பேர் பார்ப்பார்கள் என கணித்து கூறியுள்ளது அந்நிறுவனம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்