பிரித்தானிய இளவரசர் திருமணம்: லண்டன் ஹொட்டல்களில் அறைகள் இல்லை

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலின் திருமணத்தையொட்டி, லண்டனில் உள்ள அனைத்து ஹொட்டல்களிலும் அறைகள் நிரம்பிவிட்டதால் விருந்தினர்கள் தங்குவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் நடிகை மேகன் மெர்க்கலின் திருமணம், நாளை பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ளது.

இதற்காக, உலகம் முழுவதும் இருந்து இளவரசரின் அபிமானிகள், ஆதரவாளர்கள் உட்பட் லட்சக்கணக்கானோர் பிரித்தானியாவில் குவிந்து வருகின்றனர்.

இதனால், விண்ட்சர் நகரில் ஏற்கனவே அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பிவிட்டன. இதன் காரணமாக ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால், பலர் சாலையிலேயே தற்காலிகக் குடில் அமைத்து தங்கி வருகின்றனர்.

இதனிடையே, பக்கிங்காம் அரண்மனையில் திருமணத்திற்காக லண்டனைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் கிளேர் டக் என்பவர், கேக் உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும், திருமணத்தையொட்டி சாரட் வண்டி ஊர்வலத்துக்கான ஒத்திகையிலும் பிரித்தானிய ராணுவ வீரர்கள் நேற்று ஈடுபட்டனர், இதனால் திருமணம் நடைபெறும் விண்டர்சர் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Matt Dunham/AP/FILE

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்