திருமணமான சில நிமிடங்களில் புதுமண தம்பதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் திருமணமான நாளில் புதுமணத் தம்பதிக்கு சொகுசு பேருந்து தயார் செய்து கொடுக்கப்பட்டது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Seaham நகரை சேர்ந்தவர் கோலின் தாம்சன். இவரும் கைலீ என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த புதுமண தம்பதி எல்லா தம்பதிகளை போல வீட்டுக்கு காரில் செல்லாமல் வித்தியாசமாக வேறு வாகனத்தில் செல்ல வேண்டும் என நினைத்தனர்.

அதன்படியே சொகுசு பேருந்து ஒன்று அவர்களுக்கு தயார் செய்யப்பட்டது.

இதையடுத்து தங்களது உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக பேருந்தில் பயணம் செய்தார்கள்.

இது குறித்து பேசிய புதுப்பெண் கைலீ, இது எங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதை வாழ்க்கையின் அற்புத தருணமாக கருதுகிறோம்.

மாலை நடைபெறவுள்ள விருந்து நிகழ்ச்சியிலும் இதே பேருந்தில் மகிழ்ச்சியாக பயணிக்கவுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்