இலங்கையில் உயிரிழந்த பிரித்தானியா வீரர்கள்: வெளியான முக்கிய தகவல்கள்

Report Print Santhan in பிரித்தானியா

இலங்கையில் ரக்பி விளையாட்டு விளையாடுவதற்காக சென்ற பிரித்தானியா வீரர்களில் மரணமடைந்த இரண்டு பேர் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Durham நகரிலுள்ள கிளிம்ஸ் பைரேட்ஸ் எனும் ரக்பி அணியைச் சேர்ந்த Thomas Howard(25) மற்றும் Baty(26) என்ற வீரர்கள் இலங்கையின் கொழும்புவில் Ceylonese Rugby and Football Club உடன் விளையாடச் சென்ற நிலையில், விளையாட்டுக்குப் பின் நைட் கிளப் ஒன்றிற்கு சென்றிருந்தனர்.

அதன் பின் மறுநாள் காலையில் ஹோட்டலுக்கு திரும்பிய இவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலில் Howard இறந்துவிட்டதாகவும், அதன் பின் கடந்த செவ்வாய் கிழமை Baty இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின் இவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை எனவும், இது ஒரு இயற்கையான மரணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதால், பொலிசார் மேலும் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனையில் இவர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது உறுதிப்படுத்த முடியாததால், வீரர்களின் சதை, இரத்தமாதிரி மற்றும் அவர்கள் உடல்களின் சில பாகங்களை சேகரித்து அதில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதில் எப்படியும் தெரியவந்துவிடும் என்று நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவர்கள், போட்டியில் விளையாடும் போது எந்த வித பாதிப்பும் இல்லாமல் தான் விளையாடியுள்ளனர். நைட் கிளப்பிற்கு சென்று வந்த பின்னரே இறந்துள்ளனர்.

இதனால் அன்றிரவு இவர்கள் அருந்திய மது எதுவும் காரணமாக இருக்கலாம் என்பதன் காரணமாகவே இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்