டயானாவின் ஆன்மா ஹரியின் திருமணத்தில் பங்கு கொள்ளும்: உருக்கமான தகவல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது மகனின் திருமணத்தில் டயானாவின் ஆன்மா பங்கு கொள்ளும், உலகமே இளவரசர் ஹரியின் திருமணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவரது தாய் மட்டும் அருகிலிருக்காமல் போக மாட்டார் என்று ராஜ குடும்பத்தின் முன்னாள் சமையல்காரர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக ராஜ குடும்பத்தின் சமையல்காரராக இருந்த பால் பர்ரல், மேகன் மெர்க்கலை இளவரசி டயானா நிச்சயம் ஏற்றுக்கொண்டிருப்பார் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ராஜ குடும்பத்திற்கு சேவை செய்ததை பயன்படுத்தி பணம் சம்பாதித்ததாக விமர்சிக்கப்பட்டதால் பிரபலமடைந்த டயானாவின் சமையல்காரரான பால், ஹரியின் திருமணத்தையொட்டி மீண்டும் ஊடகங்கள் முன் தோன்ற ஆரம்பித்துள்ளார்.

சனிக்கிழமை திருமணம் நடக்கும் சமயத்தில் இளவரசர்களான வில்லியமும் ஹரியும் நிச்சயம் தங்கள் தாயைக் குறித்தே எண்ணிக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர்கள் அவரை நினைத்துக் கொண்டிருக்கும்போது டயானா மட்டும் எப்படி அங்கிருக்காமல் போவார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டயானா உயிருடன் இருந்திருந்தால் திருமணத்தில் நிச்சயம் மையமாக நின்றிருப்பார், தனது பேரக்குழந்தைகளுடன் அவர் நிற்கும் காட்சியே கண் கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதன்முறையாக இளவரசர் ஹரியை சந்தித்ததாகக் கூறும் பால், இளவரசி டயானா தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை தன்னிடம் ரகசியமாக தெரிவித்ததாகவும் இதுவரை இதை தான் யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறினார்.

அதேபோல் ஒரு நாள் வில்லியம் தான் ராஜாவாக விரும்பவில்லை என்று கூறியதாகவும் உடனே ஹரி அப்படியானால் உனக்கு பதில் நான் ராஜாவாகிறேன் என்று கூறியதாகவும் அன்றிலிருந்து அவரை தாங்கள் GKH - Good King Harry என்று அழைக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்