பிரித்தானியா வருங்கால இளவரசி மெர்க்கலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய வருங்கால இளவரசி மேகன் மெர்க்கலில் நிகர சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரிக்கும், நடிகை மேகன் மெர்க்கலுக்கும் வரும் 19-ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

பிரபல நடிகையாக வலம் வரும் மெர்க்கல் நடிப்பின் மூலம் அதிகளவு பணம் சம்பாதித்துள்ளார்.

முக்கியமாக அவர் நடித்த Suits என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மிக பிரபலமாகும்.

இதோடு CSI: Miami மற்றும் 90210 போன்ற நிகழ்ச்சிகளும் மெர்க்கலுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

Suits நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் நடிக்க மெர்க்கல் $50,000-க்கும் அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது வருடாந்திர சம்பளமாக சுமார் $450,000-ஐ அவர் பெற்றுள்ளார்.

Remember Me என்ற திரைப்படத்தில் நடிக்க $187,000 மற்றும் The Candidate திரைப்படத்தில் நடிக்க $171,429-யும் மெர்க்கல் சம்பளமாக பெற்றுள்ளதாக தெரிகிறது.

மொத்தத்தில் celebritynetworth.com என்ற வளைதளத்தின் கணக்குப்படி மெர்க்கலின் மொத்த சொத்து மதிப்பு $5 மில்லியன் ஆகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்