ஆபாச பட நடிகருடன் டேட்டிங்கில் இருந்த பிரித்தானியாவின் வருங்கால இளவரசி மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கலின் திருமணம் மே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொள்ளவிருக்கும் இவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாவதை விட, மெர்க்கல் பற்றிய செய்திகள் தான் அதிகமாக வெளியாகின்றன.

இதற்கு காரணம் அவர் ஒரு ஹாலிவுட் நடிகை ஆவார். இதுதவிர மெர்க்கலுக்கு இது இரண்டாவது திருமணம். Trevor Engelson என்பவரை திருமணம் செய்த மெர்க்கல் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

மேலும், ஹரியை விட மெர்க்கல் அதிகமாக டேட்டிங்கில் இருந்துள்ளார். இதன் காரணத்தினாலேயே மெர்க்கலின் தனிப்பட்ட வாழ்க்கை அதிகமாக விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

Harry & Meghan - The Love Story என்ற புத்தகத்தை Emily Herber என்பவர் எழுதி வருகிறார். இந்த புத்தகத்தில் இவர்கள் இருவருக்குமிடையே மலர்ந்த காதல் மற்றும் இவர்களது வாழ்க்கை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

மெர்க்கல் தனது முதல் கணவர் Trevor Engelson- ஐ விவகாரத்து செய்த பின்னர், golfer Rory McIlroy மற்றும் Canadian ice hockey star Michael Del Zottoஆகிய இருவருடன் தொடர்பில் இருந்தார் என புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் Trevor Engelson-ஐ 2002 ஆம் ஆண்டில் மெர்க்கல் சந்தித்துள்ளார். காதலர்களாக இருந்த இவர்கள் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 2013 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன்பின்னர், Canadian ice hockey வீரர் Michael Del Zotto - வுடன் மிகவும் நெருங்கி பழகியுள்ளார். நியூயோர்க்கில் Michael விளையாடுவதை ரசித்து பார்த்த மெர்க்கல், மிச்செல்லை The Best என்று அழைத்தார். இது சமூகவலைதளங்களில் வைரலானது.

2014 ஆம் ஆண்டில், golfer Rory McIlroy- யுடன் ஐஸ் பக்கெட் சேலஜ்ஜில் கலந்துகொண்டு விளையாடினார். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இரவு விருந்துக்கு செல்வது என நெருக்கமாக இருந்தனர்.

இவருக்கு, அடுத்தபடியாக Cory Vitiello என்ற செப்பை டொரண்டோவில் வைத்து சந்தித்துள்ளார். உணவின் மீது அதிக விருப்பம் கொண்டவரான மெர்க்கல், சிறந்த தொழிலாக உணவு தயாரிப்பதை கூறினார்.

இவர்கள் இருவரும், தங்களது நாய்களை அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சி செல்வது, தனிமையில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இறுதியில், தனது உண்மையான காதலை இளவரசர் ஹரியிடம் கண்டுள்ளார் மெர்க்கல் என அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இத்தனை காதலர்கள் குறித்த விவரம் வெளியான நிலையில், தற்போது ஆபாச பட நடிகருன் மெர்க்கல் டேட்டிங்கில் இருந்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.

22 வயதில் மொடலாக அடியெடுத்து வைத்த மெர்க்கல், ஆரம்பத்தில் ஆபாச பட நடிகரான Simon Rex என்பவருடன் டேட்டிங்கில் இருந்துள்ளார். இந்த நடிகர் தனது நடிப்பிற்காக விருது பெற்றவர். ஆபாச பட நடிகராக இருந்த இவர், பின்னர் ஒரு நடிகராகவும், மொடலாகவும் பயணிக்க ஆரம்பித்தார்.

திரையுலகில் மெர்க்கல் அடியெடுத்து வைத்தபோது அவர் அந்தளவுக்கு பிரபலம் இல்லை. இதனால் இவர்களின் இருவரின் டேட்டிங் அந்த அளவுக்கு பேசப்படவில்லை.

காலம் செல்ல மெர்க்கலும் ஹாலிவுட் திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முனைப்புடன் செயல்பட்டதையடுத்துதான் அவரது பெயர் அடிபட்டதோடு, அவரது காதலர்களின் பட்டியலும் சேர்ந்து வெளியானது.

தற்போது, பிரித்தானியாவின் இளவரசரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதால், இவரது தனிப்பட்ட வாழ்க்கை அன்றாடம் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers